மனிதர்கள் குறுகலான பாதையில் நடக்கும் போது நிதானமாக செல்வதை போல, ரோபோ ஒன்று முதன்முறையாக குறுகலான பாதையில் பேலன்ஸ் செய்து நடைபயிற்சி மேற்கொள்ளும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மற்றும் ரோபோ மயமாகி காணப்படுகிறது. பல நாடுகளும் மனிதனை ஒத்திருக்க கூடிய மற்றும் மனிதனின் செயல்களை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வல்லுனர்களின் முயற்சி சினிமாவில் பல முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் அவ்வபோது கிடைத்து ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்ரேலியப் பிரதமர் மீது முட்டை வீச்சு!
ஆஸ்ரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீது முட்டை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. நேற்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பரப்புரை நிகழ்வின் போது மக்களுடன் நின்று சந்தித்துக்கொண்டிருந்தபோது இளம் பெண் ஒருவர் பின்பக்கமாக வந்து பிரதமரின் தலையில் முட்டையை வீசியுள்ளார். முட்டையை வீசிய பெண்ணைப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். முட்டை வீசிய இளம் பெண் ஓடும் போதும் பாதுகாப்பு அதிகாரிகளால் மடக்கி பிடிக்கும் முயற்சியில் வயோதிப் பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். விழுந்த வயோதிபப் பெண்ணை பிரதமர் ஸ்கூட் மொரிசன் எழுப்பி ...
Read More »ஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்!
ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கேலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர். பொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார், பொதுமக்கள் என யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து திருடிச் செல்வது வழக்கமான ஒன்று தான். திருடர்கள் முகத்தில் கருப்பு நிற முகமூடி அணிந்தோ, அல்லது கர்ச்சீப் கட்டி கொண்டோ தான் திருட்டில் ஈடுபடுவர். அப்படி ஒரு திருடன் ஆஸ்திரேலியாவில் ...
Read More »கொச்சிக்கடை தேவாலயம் இன்று திறக்கப்படும் !
உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான, கொழும்பு- கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமானது, ஆராதனைகளுக்காக மீண்டும் இன்று முதல் திறக்கப்படுவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணிவரை ஆராதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், திருப்பலி பூஜைகள் இடம்பெறாது என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர். எனவே தேவாலயத்துக்கு வருகைத் தருபவர்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »குப்பையிலிருந்து இராணுவச் சீருடை மீட்பு!
ஹட்டனில் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலக்கூடத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில், இராணுவத்தினரின் சீருடையொன்று இன்று (07) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பேருந்து தரிப்பிட அலுவலகத்துக்கு சிலர் தகவல் வழங்கியதையடுத்து, அலுவலக அதிகாரிகள் காவல் துறைக்கு அறிவித்திருந்த நிலையில், அங்கு விரைந்த காவல் துறை குறித்த பொதியை சோதனையிட்ட போது, அதிலிருந்து இராணுவத்தினரின் சீருடையொன்று மீட்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகப் காவவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Read More »யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தரை பதவி விலக்கிய மைத்திரி!
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக ஜனாதிபதி அறிவிப்பொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான ...
Read More »மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் சஹ்ரானின் குண்டு தயாரிக்கும் முகாம் கண்டுபிடிப்பு !
மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் இருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான சஹ்ரானின் முக்கிய முகாமொன்றை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடுவிலுள்ள காட்டுப்பகுதியிலேயே குண்டுகள் தயாரிக்கும் முக்கிய முகாமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாவலி வலயத்திற்குட்பட்ட அரச காணியொன்றை வேறொருவரின் பெயரில் குத்தகைக்கு எடுத்து குறித்த பகுதியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய குண்டுகளை அவ்விடத்தில் தான் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். இதேளை, குறித்த காட்டுப்பகுதியலுள்ள வீட்டில் திருத்த வேலைகள் அண்மையில் இடம் பெற்றமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ...
Read More »முப்படையினருடன் 10, 247 மேலதிக சிவில் பாதுகாப்பு படையினர் இணைப்பு!
தேசிய பாதுகாப்பிற்காக முப்படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினர் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக 10,247 சிவில் பாதுகாப்பு பிரிவினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கத்தோலிக்க தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. 23 பாதுகாப்பு பிரிவில் 10,247 பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம், மஹா ஓயா,வெலி ஓயா, கெபிதிகொல்லாவ, மெதிரிகிரிய, மொனராகல, கொமரன்கடவல,புத்தளம் மற்றும் ...
Read More »மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை?
அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமியத்து மில்லாது இப்ராகிம் ஆகிய அமைப்புகள் கடந்த வாரம் அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தடை செய்யப்பட்டன. இந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுடன் தொடர்புகளை ...
Read More »ரஷ்யாவில் விமானம் தீப்பற்றி எரிந்து விபத்து – 41 பேர் பலி!
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 41 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர்மன்ஸ்க் கிளம்பிய சுகோய் சூப்பர்ஜெட் 100 விமானம் அவசரமாக தரையிறங்கும் போது ஏற்பட்ட தீவிபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 41 பேர் பலியாகினர். இந்திய நேரப்படி காலை 3 மணியளவில் கிளம்பிய சூப்பர்ஜெட் விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். மாஸ்கோவின் ஷெர்மெட்யெவோ விமான ...
Read More »