அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமியத்து மில்லாது இப்ராகிம் ஆகிய அமைப்புகள் கடந்த வாரம் அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தடை செய்யப்பட்டன.
இந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த மேலும் நான்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளே அடுத்த வாரம் தடை செய்யப்படவுள்ளன.
Eelamurasu Australia Online News Portal