தேசிய பாதுகாப்பிற்காக முப்படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினர் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக 10,247 சிவில் பாதுகாப்பு பிரிவினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கத்தோலிக்க தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. 23 பாதுகாப்பு பிரிவில் 10,247 பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம், மஹா ஓயா,வெலி ஓயா, கெபிதிகொல்லாவ, மெதிரிகிரிய, மொனராகல, கொமரன்கடவல,புத்தளம் மற்றும் கந்தலே, உஹன, வவுனியா, வில்பத்து, உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து 773 பேர் கொழும்பின் பாதுகாப்பு சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாடுதழுவிய ரீதியில் உள்ள அரச திணைக்களங்களில் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal