ஹட்டனில் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலக்கூடத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில், இராணுவத்தினரின் சீருடையொன்று இன்று (07) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பேருந்து தரிப்பிட அலுவலகத்துக்கு சிலர் தகவல் வழங்கியதையடுத்து, அலுவலக அதிகாரிகள் காவல் துறைக்கு அறிவித்திருந்த நிலையில், அங்கு விரைந்த காவல் துறை குறித்த பொதியை சோதனையிட்ட போது, அதிலிருந்து இராணுவத்தினரின் சீருடையொன்று மீட்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகப் காவவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal