ஆஸ்ரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீது முட்டை வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பரப்புரை நிகழ்வின் போது மக்களுடன் நின்று சந்தித்துக்கொண்டிருந்தபோது இளம் பெண் ஒருவர் பின்பக்கமாக வந்து பிரதமரின் தலையில் முட்டையை வீசியுள்ளார்.
முட்டையை வீசிய பெண்ணைப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
முட்டை வீசிய இளம் பெண் ஓடும் போதும் பாதுகாப்பு அதிகாரிகளால் மடக்கி பிடிக்கும் முயற்சியில் வயோதிப் பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளார்.
விழுந்த வயோதிபப் பெண்ணை பிரதமர் ஸ்கூட் மொரிசன் எழுப்பி இருப்பதற்கு உதவிசெய்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal

