இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிராக அமெரிக்கா சட்டநடவடிக்கை எடுக்க கூடிய சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது. அந்த தாக்குதல்களில் அமெரிக்க பிரஜைகளும் கொல்லப்பட்டதினால் அமெரிக்கா அதன் நீதிமன்றமொன்றில் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க கூடும் என்று அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று தங்களது பிரஜைகளை பலிக்கொடுத்த மற்றைய நாடுகளும் குறிப்பாக ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா, இந்தியா போன்றவை வழக்குகளை தொடுக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வில்பத்துவில் கடற்படை முகாம் நீக்கப்படவில்லை!
வில்பத்து, வியாட்டுகுளம் பகுதியில் கடற்படை முகாம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் தெளிவான தகவலை வழங்குமாறும், நாட்டுக்குள் அசாதாரண நிலைமைகள் தோன்றக் கூடியதான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கடற்படையின் முகாம் ஒன்று வில்பத்து பகுதியில் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் தகவல் தவறானது. இப்பகுதியில் காணப்பட்டது கடற்படையின் முகாம் அல்ல. இது கடற்படையின் நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்திய 26 ஏக்கர் நிலப்பரப்பாகும். இந்த நிலத்தில் தேசிய உணவு ...
Read More »பெனாசிர் புட்டோவின் கணவர் கைது!
போலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியதற்கு இடையே ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சர்தாரி. ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது ...
Read More »ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொலை – அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை!
ஆஸ்திரேலிய பெண்ணை சுட்டுக்கொன்றது தொடர்பாக அமெரிக்க காவல் துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர், முகமது நூர். இவர் மினியா போலிஸ் நகரில் 2017-ம் ஆண்டு, ஜூலை மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை நோக்கி வந்த ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட் என்ற ஆஸ்திரேலிய பெண்ணை அவர் சுட்டுக்கொன்று விட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட், தனது வீட்டின் பின்புறம் நடந்த ...
Read More »மல்லையா: இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை கண்டுகளித்தார்!
ரூ. 9,000 கோடி கடன் பெற்று இங்கிலாந்து தப்பிச்சென்ற விஜய் மல்லையா இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வந்துள்ளார். இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ. 9,000 கோடி கடன் பெற்று தப்பிச்சென்ற விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் அனுமதி வழங்கினார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த ...
Read More »தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட மணலாறு ஆமையன் குளம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்ப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலின் செயற்பாடுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன . 1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் திருகோணமலை எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழ்மக்கள் பெரும்பான்மையினத்திவர்களால் விரட்டியடிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களும் காணிகளும் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு ...
Read More »அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல்?
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கல்வித்திணைக்களத்திடம் கல்வி அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து பல குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக அண்மையில் வெளிவந்த தகவல்களை அடுத்து இந்தக்கோரிக்கை அமைச்சு மட்டத்திலிருந்து எழுந்திருக்கிறது. குறிப்பாக மெல்பேர்ன் Monash பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து கடந்த மூன்று வாரங்களில் 12 ற்கும் மேற்பட்ட திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இந்தவாரம் ...
Read More »தீவிரவாதத்தை இல்லாதொழிக்க சட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்!
சர்வதேச தீவிரவாதத்தை முழுமையா துடைத்தெறிய வேண்டுமாயின் சட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அரசியல் காரணிகளை மைய்யப்படுத்தி ஒரு போதும் அடிப்படைவாத தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பௌத்த பிக்குமார்களை ஒன்றுப்படுத்தி இன்று கொழும்பில் ‘ஜாதிக மக’ என்ற தொனிப்பொருளில் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தெளிவுப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஈஸ்டர் குண்டு தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் அழிவடைந்திருந்தாலும் இன்றும் இவர்களின் நோக்கம் மக்களோடு மக்களாக ...
Read More »ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய முடியாது!
நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்துவது எமது நோக்கமும் அல்ல என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். தெரிவுக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களாக சென்றவடைத் தடுப்பதற்காகவே ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை இரவுஇடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ...
Read More »இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது!
லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருதைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தியவர் கிரேட்டா தன்பெர்க். இது பிரேசில், உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் இளம் ஆர்வலர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், லண்டனில் சர்வதேச பொதுமன்னிப்பு சபை சார்பில் ...
Read More »