போலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியதற்கு இடையே ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சர்தாரி. ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது.
இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவருடைய சகோதரியை இன்னும் கைது செய்யவில்லை. இதுதொடர்பாக முழுமையான விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal