இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் பூமியின் வளையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தோனேசியா.தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா, சர்வதேச அளவில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சிறிலங்கா காவல்துறையின் செயல்பாடுகளில் எமக்கு நம்பகத் தன்மை கிடையாது! – சத்தியமூர்த்தி
சிறிலங்கா காவல்துறை தனது கடமைகளை ஆற்ற தவறிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குற்றஞ்சுமத்தியுள்ளார். காவல்துறையின் செயல்பாடுகளில் எமக்கு நம்பகத் தன்மை கிடையாது. இருப்பினும் சட்டத்தை நடை முறைப்படுத்தும் பொறுப்பு தங்களிடமே உள்ளதனால் நாடுகின்றோம் என காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட காவல்துறையினர் வெறும் பார்வையாளராக இருப்பின் சீரான நிர்வாகத்தை கொண்டு நடாத்த முடியாது. இதற்கு காவல்துறையின்; ஒத்துழைப்புத் தேவை. குடாநாட்டில்இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கும் காவல்துறையினர் ...
Read More »ரணிலின் வருகையை புறக்கணிக்கிறது ஏறாவூர் நகரசபை!
நாளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள மட்டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகக் கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முதல்வர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணிக்கத் தீர்மானித்தள்ளதாக நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் தெரிவித்தார். இதேவேளை பிரதமரின் வருகையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் எவ்வித பணிகளிலும் நகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதில்லையென்றும் முடிவுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை ...
Read More »பீட்ஸா போட்டி: அவுஸ்திரேலியா உணவகம் முதலிடம்!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்த பீட்ஸா, உலகளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்த பீட்சாவினை “400 Gradi” பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் எங்கிலும் இருந்து பல்லாயிரம் உணவங்கள் இத்தாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தன. இருப்பினும் இப்போட்டியில் கலந்து கொண்ட உணவங்கள் தயாரித்த பீட்ஸாவினை பின்தள்ளி 400 Gradi மெல்பேர்ன் பீட்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Read More »அமெரிக்க வீரர்களின் உடைமைகளை திரும்ப வழங்கியது வடகொரியா!
கொரியப்போரின் போது உயிர்நீத்த அமெரிக்க வீரர்களில் 55 பேர் பயன்படுத்திய உடைமைகளை வடகொரியா அமெரிக்காவுக்கு திரும்ப கொடுத்துள்ளது. கடந்த 1950-53 ஆண்டுகளில் நடந்த கொரிய போரின் போது சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். போருக்கு பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு நெருக்கமாகவும், வடகொரியா ரஷியா மற்றும் சீனாவுக்கு நெருக்கமானதாகவும் மாறிப்போனது. அமெரிக்கா – வடகொரியா இடையே பல ஆண்டுகளாக இருந்த பகை கடந்த ஜூன் மாதம் டிரம்ப் – கிம் சந்திப்பை அடுத்து குறைந்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த ...
Read More »பயணிகளுக்கான வரைபட சேவை!
இணையத்தில் வரைபடம் என்றதும் கூகுள் வரைபடம்தான் நினைவுக்கு வரும். கூகுள் வரைபடம் தவிர மேலும் பல வரைபட சேவைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சைஜிக் டிராவல் மேப்ஸ். பயணிகளுக்குத் தேவையான தங்குமிடங்கள், முக்கிய இடங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றைக் கச்சிதமாக அடையாளம் காட்டுகிறது. இந்தத் தளத்தின் மூலம் கூடுதலான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். தேவையெனில் இதன் மூலமே பயணங்களைத் திட்டமிடலாம். தேடல் வசதியும் இருக்கிறது. பயனாளிகளின் இருப்பிடத்தை உணர்ந்து தளத்தில் நுழைந்ததுமே அவர்களுடைய வசிப்பிடப் பகுதி வரைபடத்தில் முன்னிறுத்தப்படுவது சிறப்பு. ‘ஓபன் ஸ்டிரீட் மேப்’ ...
Read More »வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்ய அவுஸ்திரேலியா பயணமான குற்றப் புலனாய்வுக் குழு!
ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களக் குழு ஒன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவல் துறை பரிசோதகர் மற்றும் உபகாவல் துறை பரிசோதகர் ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் ஒருவாரம் தங்கியிருந்து மெல்போர்னில் உள்ள ஊடகவியலாளர் கீத் நொயரிடம் வாக்கு மூலம் பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கீத்நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், இராணுவ தலைமை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற அமல் ...
Read More »“தற்கொலை செய்துகொள்வதைவிட வாழ்க்கையை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது”!
வின்சென்ட் வான் கா தன் அண்ணனின் இறுதி ஊர்வலத்தில் அதிகபட்ச ஓவியர்களையும் நண்பர்களையும் பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தார் தியோ. மனம் வான் காவையே நினைத்துக் கொண்டிருந்தது. “தற்கொலை செய்துகொள்வதைவிட வாழ்க்கையை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது” என்று எழுதிய வான் கா, தற்கொலையின்மூலமே மரணத்தைத் தேடிக்கொண்டார். வான் காவின் சவப்பெட்டியைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் வண்ணத்தின் ஈரம்கூட காயவில்லை. வான் காவுக்கு விருப்பமான சூரிய காந்திப் பூக்களால் சவப்பெட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரை அமைதிப்படுத்தும் கான்வாஸும், மடிப்பு ஸ்டூலும், திறந்திருந்த வண்ணக்குழம்புகளும் அருகில் ...
Read More »பௌத்த துறவிகளான தாய்லாந்து குகைச்சிறார்கள்!
தாய்லாந்து குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்காலிகத் துறவறத்தை மேற்கொண்டுள்ளனர். தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு ஜூன் மாதம் 23-ஆம் திகதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த மாதம் 2-ம் திகதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கா, ...
Read More »யாழ். குடாநாட்டில் 14,000 படையினர் உள்ளனராம்!
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் தலைமையகக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி தெரிவித்துள்ளார். குடாநாட்டில் தற்போது 51, 52, 55 ஆகிய 3 டிவிசன்களே நிலைகொண்டுள்ள னர். அவற்றைச் சேர்ந்த சுமார் 14 ஆயிரம் படையினர் தற்போது எனது கட்டுப்பாட்டில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பதியேற்ற பின்னர் குடாநாட்டில் படைக்குறைப்பு நடக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுளார். 2009ஆம் ஆண்டு ...
Read More »