இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிறுவி உள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2013-ன் இறுதிக்கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014 தொடக்கத்தில் இருந்து ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மைத்திரி சீனா பயணமானார்!
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை சீனா நோக்கி பயணமாகியுள்ளார். இன்று காலை 7.35 மணியளவில் யூ. எல். 302 என்ற ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் சீனா பயணமாகியுள்ளதுடன், ஜனாதிபதியுடன் 27 பேர் கொண்ட குழுவொன்றும் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »சிறிலங்கா ஜனாதிபதியும் பிரதமரும் முதலில் பதவியில் இருந்து விலக வேண்டும்!
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல் வாதிகள் சம்மந்தம் என கூறும் போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள். இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது, ஆனால் இந்த பொறுப்பில் இருந்து முதலில் சிறிலங்கா ஜனாதிபதியும் பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர். ஆகவே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று (12) மட்டக்களப்பு ஈஸ்லகுன் ஹோட்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ...
Read More »மெல்பர்ன் நெடுஞ்சாலையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 92 வயதான முதியவர்!
மெல்பர்னின் Monash நெடுஞ்சாலையில் Mobility ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற 92 வயோதிபர் முதியவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் காவல் துறை இடைநிறுத்தப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இவ்வீதியில் குறித்த முதியவர் சென்றுகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டி ஒருவர் அம்முதியவரை பாதுகாப்பதற்காக Hazard விளக்கினை ஒளிர்ந்தபடி அவரைப் பின்தொடர்ந்தார். அதேநேரம் காவல் துறைக்கு அறியத்தந்திருந்தார். இதையடுத்து உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் முதியவரை இடைநிறுத்தி பாதுகாப்பாக மீட்டனர். தனது காரில் முதியவரைப் பின்தொடர்ந்த Bruce என்ற ...
Read More »நாளை கொழும்பில் தாக்குதல் நடத்தப்படலாம்!
நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை, கொழும்பின் வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெறலாம் என சமூக வலைத்தலங்களில் பரவிவரும் தகவல்கள் உளவுத் துறையால் உறுதிப்படுத்தப்படாதவை என காவல் துறை பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர் ருவான் குணசேகர கூறினார். எனினும் தமக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் இலேசாக தாம் கருதவில்லை எனவும் அதனால் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் வீண் அச்சம் கொள்ளாது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
Read More »அவுஸ்திரேலிய நூலகத்தைக் கலங்கடித்த தூரியன்!
அவுஸ்திரேலியாவின் கான்பரா (Canberra) பல்கலைக்கழக நூலகத்தில் ஆபத்தான வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சி நூற்றுக் கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகலில் கடுமையான வாடை குறித்த புகாரின் பேரில் தீயணைப்பாளர்கள் நூலகத்துக்கு விரைந்தனர். ஆறே நிமிடங்களுக்குள்ளாக அந்தக் கட்டடத்திலிருந்து சுமார் 550 பேர் வெளியேற்றப்பட்டனர். ஒரு மணி நேரத் தீவிரத் தேடலுக்குப் பின்னர் குப்பைத் தொட்டியில் தூரியான் பழம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களைக் கண்டுபிடிக்கக் கூடிய குழுவைச் சேர்ந்தோர் அந்த வட்டாரத்தின் காற்றுத் தரம் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
Read More »இந்தியாவில் ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ பிராந்தியத்தை ஸ்தாபித்ததாக ஐ.எஸ் அறிவிப்பு
இந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டதாக, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில், காஷ்மிர் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலொன்றைத் தொடர்ந்தே, தாம் தமக்கான இடமொன்றை ஸ்தாபித்ததாக, அவ்வமைப்பு அறிவித்துள்ளது. இந்த மோதலின் போது, ஐ.எஸ் அமைப்பு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், அவ்வமைப்பின் அமாக் செய்திச் சேவை, நேற்றைய தினம் (10), செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு, இந்தியாவில் தாம் ஸ்தாபித்த இடத்துக்கு, ‘விலாயஹ் ...
Read More »பாகிஸ்தானில் நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும்! சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ...
Read More »தற்கொலைத் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் தகவல்களை தெரியப்படுத்துக!
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்துமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் பெற்றோரை இழந்துள்ள பிள்ளைகள் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் காவல் துறை பிரிவிற்கு உரிய தகவல்களை தெரியப்படுத்துமாறு கோரப்படுகின்றது. பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலன் கருதி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பொறுப்பானவர்கள் 011-2444444, 011- 2337041 , 011-2337039 ஆகிய இலக்கங்களின் ஊடாக தொடர்புக் கொண்டு உரிய தகவல்களை வழங்க முடியும் ...
Read More »மன்னார்,மாந்தை மனித புதைகுழி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
மன்னார் மற்றும் மாந்தை மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர் வரும் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு. மன்னார்,திருகேதீஸ்வரம்,மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஆகியவற்றின் வழக்கு விசாரனைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று மன்னார் நீதிமன்றத்தில் குறித்த இரு வழக்குகளும் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா மன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால் பதில் ...
Read More »