அவுஸ்திரேலியாவின் கான்பரா (Canberra) பல்கலைக்கழக நூலகத்தில் ஆபத்தான வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சி நூற்றுக் கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகலில் கடுமையான வாடை குறித்த புகாரின் பேரில் தீயணைப்பாளர்கள் நூலகத்துக்கு விரைந்தனர்.
ஆறே நிமிடங்களுக்குள்ளாக அந்தக் கட்டடத்திலிருந்து சுமார் 550 பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஒரு மணி நேரத் தீவிரத் தேடலுக்குப் பின்னர் குப்பைத் தொட்டியில் தூரியான் பழம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களைக் கண்டுபிடிக்கக் கூடிய குழுவைச் சேர்ந்தோர் அந்த வட்டாரத்தின் காற்றுத் தரம் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர்.