இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல் வாதிகள் சம்மந்தம் என கூறும் போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள். இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது, ஆனால் இந்த பொறுப்பில் இருந்து முதலில் சிறிலங்கா ஜனாதிபதியும் பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர். ஆகவே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று (12) மட்டக்களப்பு ஈஸ்லகுன் ஹோட்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்ட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.