மன்னார் மற்றும் மாந்தை மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர் வரும் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு.
மன்னார்,திருகேதீஸ்வரம்,மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஆகியவற்றின் வழக்கு விசாரனைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று மன்னார் நீதிமன்றத்தில் குறித்த இரு வழக்குகளும் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா மன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால் பதில் நீதவான் இ. கயஸ் பெல்டானோ தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம் பெற்றது.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த இரு வழக்கு விசாரனைகளையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தார்.
நேற்றய தினம் மன்னார் மனித புதைகுழி தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பான விடையங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட போதிலும் எந்தவித சமர்பிப்புக்களும் இடம் பெறவில்லை.
அதே நேரத்தில் திருகேதீஸ்வர மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு தொடர்பாகவும் எதுவித முன்வைப்புக்களும் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
Eelamurasu Australia Online News Portal