கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்துமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் பெற்றோரை இழந்துள்ள பிள்ளைகள் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் காவல் துறை பிரிவிற்கு உரிய தகவல்களை தெரியப்படுத்துமாறு கோரப்படுகின்றது.
பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலன் கருதி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பொறுப்பானவர்கள் 011-2444444, 011- 2337041 , 011-2337039 ஆகிய இலக்கங்களின் ஊடாக தொடர்புக் கொண்டு உரிய தகவல்களை வழங்க முடியும் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.