அவுஸ்திரேலியாவில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஆம்புலன்ஸ் குழு செயல்பட்டது பிரபலமானதால், அதை அரசே ஏற்று செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இருக்கும் அதிகாரிகள் இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் கடைசி ஆசையை கேட்டறிந்து அவர்களின் ஆசையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது அவர்கள் தாங்கள் கடைசியாக பார்க்க விரும்பும் இடங்கள், நபர்கள் இன்னும் வேறு என்ன நினைக்கிறார்களோ அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றனர். இது மிகவும் பிரபலமானதால், இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்ட குவின்ஸ்லாந்து ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அவசரகாலச் சட்டத்தின் நீடிப்பானது அமைதியான ஒன்றுகூடலுக்குத் தடையாக உள்ளது!
இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கின்றமையானது மக்களின் அமைதியான ஒன்று கூடலுக்கு தடையாக காணப்படுகின்றது. அத்துடன் இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றவேண்டும். இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐக்கியநாடுகள் சபை தயாராகவே இருக்கின்றது என்று இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் அமைதியான ஒன்றுகூடலுக்கான விசேட அறிக்கையாளர் கிளமன்ட் நைலட்சோஸி தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்ப்பில் சரியான ஆலோசனைகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை எப்போதுமே தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். ...
Read More »அரசியல் பிரதிநிதிகள் ஒன்றுபட வேண்டும்!
சிறுபான்மையினத் தலைவர்கள் தற்போது இணக்க அரசியலால் எவ்வித பயனுமில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். இதனை அவர்களுக்கான காலம் கடந்த சுடலை ஞானம் என்றே குறிப்பிட வேண்டியிருக்கிறது. எனவே தேர்தல்கள் நெருங்கும் இந்த வேளையில் சிறுபான்மையின அடிமட்ட மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் கருத்திற்கொண்டு,அவற்றை மையப்படுத்தி சிறுபான்மையின அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து சிறுபான்மையினக் கட்சிகளின் கூட்டமொன்றுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருக்கும் அதேவேளை, ...
Read More »மூன்னூறு நாள் சுமந்தவளுடன் வெறும் முப்பது நாட்கள் ……!
நிரந்தரம் இல்லா மகிழ்ச்சியில் மகளுடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்து புன்னகைத்த நளினியின் படம் சமுகவளைதலங்கள் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி அனைவரின் மனங்களையும் உருகவைதுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் முருகன் நளினி தம்பதியினருக்கு சிறையில் பிறந்த குழந்தை ஹரித்ரா லண்டனில் கல்வி கற்றுவந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெறவுள்ளதினால், தனது மகள் திருமணத்திற்காக சிறைவிடுப்பு கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததினால் , இன்று (ஜூலை 25) காலை 9.40 ...
Read More »வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது. ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது. எனினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, அதற்கு பிரதிபலனாக அந்நாடு மீது ...
Read More »மலர்ந்தது மொட்டின் புதுக்கூட்டு!
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று முற்பகல் கையெழுத்திடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்காக 10 கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அவற்றில் 10 கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More »புத்தர் சிலை விவகாரம் : 15 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !
மாவனெல்லயில் புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 15 சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த 15 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாவனெல்ல உள்ளிட்ட பிரதேசங்களில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் 15 போர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே குறித்த 15 சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More »ஆஸ்திரேலியாவில் ரூ.1,000 கோடி போதைப்பொருள் சிக்கியது!
ஆஸ்திரேலியாவில் கடத்தல் வேனை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த 273 கிலோ எடையிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள போலீஸ்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது, வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து விபத்துக்கு காரணமான வேனை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஈஸ்ட்வுட் நகருக்கு அருகே அந்த வேனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வேனை ...
Read More »ஐ.நா. தூதுவருடன் வழக்குகள் குறித்து பேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுப்பதா?
நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் 3 வழக்குகள் தொடர்பில் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடு கள் விசேட தூதுவருடன் சந்திப்பை நடத்த வருமாறு நீதிபதிகளுக்கு வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் அழைப்பு விடுத்த கடி தம் ஒன்று தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இந்தச் சந்திப்பை நிறுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன விசேட கூற்றொன்றை முன்வைத்து ...
Read More »புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த அவுஸ்திரேலியாவுக்கு வலியுறுத்தல்!
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பபுவா நியூகினியின் பிரதமர் ஜேம்ஸ் மராபி தனது நாட்டின் மனுஸ் தீவில் ஸ்தம்பிதமடைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த காலவரையறையொன்றை நிர்ணயிக்க அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு நேற்று வலியுறுத்தியுள்ளார். மராபி இரு மாதங்களுக்கு முன்னர் பிரதமராக பதவியேற்ற பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். அவர் அவுஸ்திரேலியாவுக்கான இந்த விஜயத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிஸன் எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்டார். அவுஸ்திரேலியாவானது தனது நாட்டுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக்கோரிக் கையாளர்கள் ...
Read More »