சிறுபான்மையினத் தலைவர்கள் தற்போது இணக்க அரசியலால் எவ்வித பயனுமில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். இதனை அவர்களுக்கான காலம் கடந்த சுடலை ஞானம் என்றே குறிப்பிட வேண்டியிருக்கிறது.
எனவே தேர்தல்கள் நெருங்கும் இந்த வேளையில் சிறுபான்மையின அடிமட்ட மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் கருத்திற்கொண்டு,அவற்றை மையப்படுத்தி சிறுபான்மையின அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து சிறுபான்மையினக் கட்சிகளின் கூட்டமொன்றுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருக்கும் அதேவேளை, தமிழ் மக்களைப் போன்று தீர்வை எட்டுவதில் தாமும் அதிருப்தி அடைந்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் விசனம் வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் சிறுபான்மையின அரசியல் தலைவர்கள் ஒன்றுபடும் வாய்ப்பு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Eelamurasu Australia Online News Portal