புத்தர் சிலை விவகாரம் : 15 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !

மாவனெல்லயில் புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 15 சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த 15 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாவனெல்ல உள்ளிட்ட பிரதேசங்களில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் 15 போர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த 15 சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.