அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பபுவா நியூகினியின் பிரதமர் ஜேம்ஸ் மராபி தனது நாட்டின் மனுஸ் தீவில் ஸ்தம்பிதமடைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த காலவரையறையொன்றை நிர்ணயிக்க அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு நேற்று வலியுறுத்தியுள்ளார்.
மராபி இரு மாதங்களுக்கு முன்னர் பிரதமராக பதவியேற்ற பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
அவர் அவுஸ்திரேலியாவுக்கான இந்த விஜயத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிஸன் எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்டார்.
அவுஸ்திரேலியாவானது தனது நாட்டுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக்கோரிக் கையாளர்கள் அனைவரையும் மனுஸ் மற்றும் நவுறு தீவுக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆறாவது ஆண்டு தினம் கடந்த வெள் ளிக்கிழமையாகும்.
இந்நிலையில் இதனையொட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அத ற்கு முதல் நாளான சனிக்கிழமை ஆகிய தினங்களில் அவுஸ்திரேலியாவெங்கும் எதி ர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
பபுவா நியூகினியிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களில் பலர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 450 புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங் குள்ள மோசமான நிலைமைகள் காரண மாக அவர்கள் தற்கொலை செய்வதற்கு முயற்சித்து வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் மேலும் 350 புகலிடக்கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் உள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal