ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று முற்பகல் கையெழுத்திடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்காக 10 கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அவற்றில் 10 கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal