பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவின் புறநகர் பகுதியில் குச்லாக் என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை பிராத்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த மசூதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா!
சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா ஹூல்ரன் அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் தூதுவராக பணியாற்றிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இடமாற்றம் பெற்று சென்ற நிலையிலேயே புதிய தூதுவராக சரா அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சரா அம்மையார், சில தினங்களில் பதவியை பொறுப்பேற்கவுள்ளார். ஹூல்ரன் அம்மையார் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் துணை இயக்குநராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது!
பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலிலேயே நாடாளுமனற உறுப்பினர் இதனை தெரிவித்தார். பலாலி ...
Read More »கோத்தபாய போட்டியிடுவதற்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியதா?
கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாகயிருக்கமாட்டோம் என தெரிவிப்பதற்காகவும் அதேவேளை சோபா உடன்படிக்கைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்காகவுமே அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான பதில் இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்ஸ் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார் தெரிவித்துள்ளார். ஆங்கில இணையத்தளமொன்றில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் ...
Read More »எமது பிள்ளைகள் எங்கே ?
வடக்கு மற்றும் கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் இன்று (15) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . பத்து வருட காலங்களாக போராடியும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எதுவித பதிலும் வழங்காத நிலையில் சர்வதேசமாவது நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரியே இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. திருகோணமலை – அம்பாறை மட்டக்களப்பு – மன்னார் – முல்லைத்தீவு – யாழ்ப்பாணம்- கிளிநொச்சி – மற்றும் ...
Read More »பரோலை நீட்டிக்க கோரி மனு அளிக்க நளினி முடிவு
நளினியின் மகள் ஹரித்ரா லண்டனில் இருந்து தமிழகம் வருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன்-நளினி உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் உள்ளனர். நளினி, முருகன் மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக நளினி கடந்த 25-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நிபந்தனைகளுடன் பரோலில் வந்தார். தற்போது வேலூர் சத்துவாச்சாரி ...
Read More »ஹாங்காங் எல்லையில் சீனா படைகளை குவிக்கிறது!
ஹாங்காங் எல்லையில் சீனா படைகளை குவித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டங்களின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மூள்வதால் ஹாங்காங் கலவர பூமியாக மாறி வருகிறது. கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை முழுவதுமாக கைவிடுவது மட்டும் அல்லாமல், குற்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு வெளிப் படையான விசாரணை, கலவர குற்றச்சாட்டுக்கு ஆளான ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஹாங்காங்கின் நிர்வாக தலைவர் கேரி லாம் ராஜினாமா ...
Read More »மஹிந்தவும் 13 பிளஸூம்
“இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் வடக்கில், கந்தரோடையில் நடைபெற்ற பாடசாலை வைபவமொன்றின் போது கூறியிருந்தார். தமது அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையே, கடந்த காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியாமல் போனதற்குக் காரணம் எனவும் பிரதமர் அக்கூட்டத்தில் கூறினார். அதேபோல், எதிர்க்கட்சிக் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தாம் தலைமை தாங்கப் போகும் பொதுஜன பெரமுன பதவிக்கு வந்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமது ஆட்சிக்காலத்தில், தாம் வாக்குறுதியளித்த, ‘13 ...
Read More »புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 26.8 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு!
கனடாவானது மாகாண ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக 26.8 மில்லியன் கனேடிய டொலரை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்துள்ளார். புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவி சேவை யில் மாகாண ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு செய்யும் முகமாக மேற்படி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் அதிக தொகையைக் கொண்ட மாகாணமான ஒன்ராறியோவின் முதலமைச்சர் டக் போர்ட் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான மேற்படி நிதியிடலுக்கு மத்திய அரசாங்கமே பொறுப்பு எனத் தெரிவித்து ...
Read More »ரணலிடம் கோரிக்கை கடிதத்தை கையளிக்க உறுப்பினர்கள் தீர்மானம்!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் களமிறக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை ஒன்றுக்கூட்டுமாறு கோரி கடிதமொன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க உள்ளதாக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுப்பாடுகள் தொடர்பில் வினவியப்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதபதி வேட்பாளராக ...
Read More »