புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 26.8 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு!

கன­டா­வா­னது  மாகாண  ரீதியில் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு  சட்ட உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக 26.8 மில்­லியன் கனே­டிய டொலரை ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக அந்நாட்டுப் பிர­தமர் ஜஸ்டின் ரூடோ நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அறி­வித்­துள்ளார்.

 

புக­லி­டக்கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சட்ட உதவி  சேவை யில்  மாகாண ரீதி­யாக  மேற்­கொள்­ளப்­பட்ட  துண்­டிப்பால் ஏற்­பட்­டுள்ள  பாதிப்பை ஈடு­ செய்யும் முக­மாக மேற்­படி தொகை ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கன­டாவின்  அதிக தொகையைக் கொண்ட மாகா­ண­மான ஒன்­ராறியோவின் முத­ல­மைச்சர் டக் போர்ட் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான  மேற்­படி நிதி­யி­ட­லுக்கு  மத்­திய அர­சாங்­கமே பொறு­ப்பு எனத் தெரி­வித்து அவர்­க­ளுக்­கான நிதியில் துண்­டிப்பை மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் ஜஸ்டின் ரூடோவின் அர­சாங்கம்  நிலை­மையை பழைய நிலைக்குக் கொண்டு வர நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லை­யொட்­டியே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஒன்­ராறியோ மாநி­லத்தால் விடுக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு இணங்க  அந்த மாநி­லத்­துக்கு அர­சாங்க நிதி ஒதுக்­கீடு செய்­வது குறித்து  பிர­தமர் ஜஸ்டின் ரூடோ இதற்கு முன் எதையும் குறிப்­பிட்டுக் கூறி­யி­ருக்­காத நிலையில் அவரால் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள அறி­விப்பு நிலை­மையை மாற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

“நாங்கள் ஒன்­ராறியோ­வி­லுள்ள மக்­களின் பக்கம் நிற்­கிறோம். அந்த வகையில் புக­லிடக்கோரிக்­கை­யா­ளர்கள் தமக்குத் தேவை­யான  சட்ட சேவை­களைப்  பெற்­றுக்­கொள்­வதை உறு­திப்­ப­டுத்­து­கிறோம்” என ஜஸ்டின் ரூடோ தன்னால் வெளியி­டப்­பட்­டுள்ள  அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு  ஜன­வரி மாதம் பத­வி­யேற்ற பின்னர் அமெ­ரிக்க-கனே­டிய எல்­லையைக் கடந்து  புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் கன­டா­வுக்குள் பிர­வே­சிப்­பது அதி­க­ரித்­த­தை­ய­டுத்து  கனே­டிய மத்­திய அர­சாங்­கத்­துக்கும் ஒன்­ராறியோ மாகாண அர­சாங்­கத்­துக்­கு­மி­டை­யி­லான பதற்­ற­ நிலை அதி­க­ரித்­துள்­ளது.

புக­லி­டக்கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான  சட்ட உத­விக்­கான நிதி ஒதுக்­கீட்டில்  மேற்­கொள்­ளப்­பட்ட துண்­டிப்பு குறித்து சட்ட உதவி சமூ­கங்­களும் அக­தி­க­ளுக்­கான சட்­டத்­த­ர­ணி­களும் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தனர்.  மேற்­படி சட்ட  உத­விக­ளுக்­கான நிதி ஒதுக்­கீடு நீக்­கப்­ப­டு­கின்­ற­மை­யா­னது புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கும்  அக­தி­க­ளுக்­கு­முள்ள தமது நியாயமான கோரிக்கைகளை  முன்வைப்பதற்கான ஆற்றலுக்கு அச்சுறுத்தலாகவுள்ளதாக  அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜஸ்டின் ரூடோவால் தற்போது மேற் கொள்ளப்பட்ட  அறிவிப்பு குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சிய டைவதாக அகதிகளுக்கான கனேடிய சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜனட் டென்ச் தெரிவித்தார்.