சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா ஹூல்ரன் அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் தூதுவராக பணியாற்றிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இடமாற்றம் பெற்று சென்ற நிலையிலேயே புதிய தூதுவராக சரா அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சரா அம்மையார், சில தினங்களில் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
ஹூல்ரன் அம்மையார் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் துணை இயக்குநராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal