கொவிட் – 19 வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு Zoom தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன் போது அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இது தொடர்பாக தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கொவிட் – 19 தொற்றின் காரணமாக ஏற்ப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ரிசாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி விரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த பிணை விண்ணப்ப மனுவையும் நீதவான் தள்ளுபடி செய்துள்ளார்.
Read More »’20’ ஐ ஆதரித்தவர்களை ஹம்கீமும், ரிஷாத்தும் வெளியேற்ற வேண்டும்
“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் 20 இற்கு ஆதரவளித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு வலியுறுத்தியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது இவ்வாறு ...
Read More »திருமணம் – இறுதி சடங்கு நடத்துவது குறித்து……..
தற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெளிவுப் படுத்தியுள்ளார். பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகள் மற் றும் ஏனைய பகுதிகளில் இடம்பெறவுள்ள திருணம் விழா, விளையாட்டு விழாக்கள், ஏனைய விழாக்கள் பங்கேற் பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். திருமணம் விழாவின் போது சுகாதார பிரிவில் ஆலோ சனை பெற்று பொலிஸாருக்கு ...
Read More »மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தாக்கிய சூறா
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் உள்ள Britomart பவளப்பாறையில் சூறா தாக்குதலுக்கு ஆளான ஆடவர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். ஈட்டியைக் கொண்டு மீன் பிடிக்கும் நடவடிக்கைக்குப் பிரபலமான அந்தப் பவளப்பாறையில், ஆடவர் இன்று, சிலருடன் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். சூறா மீன் அவரின் தொடைப்பகுதியைக் கடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கவலைக்கிடமாக உள்ள ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Read More »அமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை
அமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என எப்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசை தடுப்பதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனோகாவும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி பரிசோதித்து வருகின்றன. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனையை அமெரிக்கா கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது. இந்த தடுப்பூசியை மீண்டும் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனையை தொடர அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (எப்.டி.ஏ.) நேற்று ...
Read More »மோசமடையும் கொழும்பின் நிலை!
கொரோனா நிலைமை மோசமடைவதால், கொழும்பு மாவட்டத்தில் கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையைில் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6.00 மணிமுதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
Read More »யாழில் நேற்று 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
“யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் மேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களை போல யாழில் தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்” எனக் கூறியிருக்கின்றார் யாழ். அரசாங்க அதிபர் க.மகேசன். தற்போதைய யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க யாழ் மாவட்டஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது; “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ...
Read More »ஆஸ்திரேலிய அரசின் உத்தரவு: நிர்கதி நிலையில் அகதிகள்
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதைத் போல ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது முடங்கிக் கிடந்த ஆஸ்திரேலிய மக்களிடையே மகிழ்வை ஏற்படுத்தி வருகின்றது. அதே வேளை, இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ள மற்றொரு முடிவு ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் உள்ள அகதிகளை நிர்கதி நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. இந்த பெருந்தொற்று சூழலில் சொந்த நாட்டு மக்களே அல்லாடி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் அங்கிருந்து ...
Read More »’20’ ஐ ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக உரையாற்றியும், வாக்களித்தும் இருக்கத்தக்கதாக, கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வாக்களித்தமை தொடர்பில் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது இல்லத்திற்கு வரவழைத்து, வெள்ளிக்கிழமை செயலாளர் நிசாம் காரியப்பரின் பங்குபற்றுதலுடன் கூட்டமொன்றை நடத்தினார். அரசியலமைப்பின் 20ஆவது ...
Read More »