அமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என எப்.டி.ஏ. முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரசை தடுப்பதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனோகாவும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி பரிசோதித்து வருகின்றன.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனையை அமெரிக்கா கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது.
இந்த தடுப்பூசியை மீண்டும் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனையை தொடர அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (எப்.டி.ஏ.) நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது. இதை அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் தடுப்பூசி தொடர்பான உலகளாவிய சோதனைகளில் இருந்து அனைத்து பாதுகாப்பு தரவுகளையும் மதிப்பாய்வு செய்து, பரிசோதனையை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என எப்.டி.ஏ. முடிவு செய்துள்ளது” என கூறி உள்ளது.
எனவே அமெரிக்காவில் மீண்டும் இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை விரைவில் தொடங்கும்.