கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான முகமது சஹ்ரான் ஹஸிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலநறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்தை மருத்துவமனைக்கு இன்று அதிரடிப்படையினரால் அவர் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பாத்திமா கொழும்பு ரிமாண்ட் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கொழும்பு ரிமாண்ட் சிறை மற்றும் வெலிகடை சிறைச்சாலையில் இதுவரை குறைந்தது 30 கைதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண் கைதிகள். அவர்களில் சஹ்ரான் ஹசிமின் மனைவி உட்பட ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழ ஆளுநருக்கு தெரியும்
ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழ ஆளுநருக்கு தெரியும் என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலை தாமதமடைவது ஏன் என கேள்வி வைரமுத்து தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கருணை காட்டுகின்றது தமிழக அமைச்சரவை முன்னரே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது எங்களுக்கு மறுப்பில்லை என காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகின்றது/இந்நிலையில் இந்த விடுதலைக்கு தடையார் என்பது ஆளுநருக்கே தெரியும் ...
Read More »மீண்டும் நியூசிலாந்தின் பிரதமரானார் ஜெசிந்தா!
நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென்(Jacinda Ardern ) 2ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். ஒக்டோபர் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, மொத்தம் உள்ள 120 இடங்களில் 65 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வெலிங்டனில் இன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2ஆவது முறையாக ஜெசிந்தா ஆர்டென் பதவியேற்றுக்கொண்டார்.
Read More »துல்லியமான தரவின்றி கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவது கடினம்
பி.சி.ஆர் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் வரை நாட்டில் கொவிட்-19 பரவலை எதிர்த்து சரியான தரவுகளை இணைப்பது கடினம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது. இந்த முடிவுகளை வெளியிட இப்போது எடுக்கப்படும் 48 மணி நேர காலத்தை நம்ப முடியாது என அவர்கள் தெரிவித்தனர். சரியான தரவு வெளியிடப்படும் வரை வைரஸை திறம்பட கட்டுப்படுத்துவதை எதிர்பார்க்க முடியாது என மருத்துவர் செனால் பெர்னாண்டோ கூறினார். சீரற்ற(Random) பி.சி.ஆர் சோதனைகள் சிவப்பு வலயப் பகுதிகளில் ...
Read More »யாழ்.கரவெட்டியில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா
யாழ். கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ். போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 248 பேருக்கு பிசிஆர் பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. இதில் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் ...
Read More »அவுஸ்திரேலியாவில் மீண்டும் காடுகளில் விடப்படும் கோலா கரடிகள்!
அவுஸ்திரேலியாவில், காட்டுத் தீயினால் படுகாயமடைந்த கோலா கரடிகள், சிகிச்சைக்குப் பின்னர், மீண்டும் காடுகளில் விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கங்காரு தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 5,20,000 ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலான நிலையில், கடுமையான தீ காயங்களுடன் 100 க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் மீட்கப்பட்டன. காயங்களுக்கு மருந்திட்டு, சத்தான உணவு வகைகளை வழங்கி கரடிகளை பராமரிக்கும் விலங்கு நல ஆர்வலர்கள், காயங்கள் குணமடைந்ததும், மீண்டும் அவைகளை வனப்பகுதிகளில் விட்டு வருகின்றனர். கங்காரூ தீவில், கடந்த ஆண்டு 50,000 கோலா கரடிகள் இருந்த நிலையில், ...
Read More »பேலியகொட மீன் சந்தைக் கொத்தணிப் பரவலுக்குக் காரணம்
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கக் காரணமாக இருந்த பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி- 1.42 ரக தொற்றுப் பிரிவு பரவியிருக்கின்றது எனச் சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை கொரோனா கொத்தணி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது.எனினும், அதனை மிஞ்சிய பேலியகொட மீன்சந்தைக் கொத்தணி கடந்த மாதம் 21ஆம் திகதி பரவ ஆரம்பித்து பாரியளவில் வியாபித்துள்ளது.
Read More »மேல் மாகாணத்தில் திங்கட்கிழமை ஊரடங்கு நீக்கப்படும்
மேல் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச்சட்டம் திங்கட்கிழமை நீக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது என அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கினை தொடரும் நோக்கம் ஜனாதிபதிக்கு இல்லை என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி பிறப்பித்து வருகின்றார், திங்கட்கிழமை ஊரடங்கை நீக்க அவர் உத்தரவிட்டுள்ளார் என மேலும் தெரிவித்தார்.
Read More »இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுக்கும் எச்சரிக்கை
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) சமூக வலைத்தளங்களில் இலவச டேட்டாக்களை வழங்குவதாகக் கூறி பரப்பப்படும் போலியான செய்திகள் குறித்து தமக்கு முறைப் பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை ஆபத்துக்குள்ளாக்கும் இத்தகைய போலியான செய்திகள் குறித்து மேற்படி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொதுமக்களை குறிப்பாக இணையத்தில்(Online) கற்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என இச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான செய்திகள் மல்வார் (malware) வைரஸை உங்களது கைத்தொலைபேசிகளில் நிறுவக்கூடும் என்றும் இதனால் ...
Read More »மன்னாரில் கிராம அலுவலர் மர்ம மரணம்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் நேற்று (3) செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை காவல் துறையினர் தெரிவித்தனர். இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடு அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ...
Read More »