பேலியகொட மீன் சந்தைக் கொத்தணிப் பரவலுக்குக் காரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கக் காரணமாக இருந்த பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி- 1.42 ரக தொற்றுப் பிரிவு பரவியிருக்கின்றது எனச் சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது.எனினும், அதனை மிஞ்சிய பேலியகொட மீன்சந்தைக் கொத்தணி கடந்த மாதம் 21ஆம் திகதி பரவ ஆரம்பித்து பாரியளவில் வியாபித்துள்ளது.