நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென்(Jacinda Ardern ) 2ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
ஒக்டோபர் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, மொத்தம் உள்ள 120 இடங்களில் 65 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இதனையடுத்து வெலிங்டனில் இன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2ஆவது முறையாக ஜெசிந்தா ஆர்டென் பதவியேற்றுக்கொண்டார்.
Eelamurasu Australia Online News Portal