யாழ்.கரவெட்டியில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா

யாழ். கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ். போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 248 பேருக்கு பிசிஆர் பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. இதில் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் அடங்குகின்றார்கள்.

மேற்படி மூவரும், பேலியகொடை மீன்சந்தைப் பகுதிக்கு சென்று வந்ததன் காரணமாக தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவரின் உறவினர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்குச் செய்யப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.