மேல் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச்சட்டம் திங்கட்கிழமை நீக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கினை தொடரும் நோக்கம் ஜனாதிபதிக்கு இல்லை என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி பிறப்பித்து வருகின்றார், திங்கட்கிழமை ஊரடங்கை நீக்க அவர் உத்தரவிட்டுள்ளார் என மேலும் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal