Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொரோனாத் தொற்றின் புதிய அறிகுறியாக கால்களில் கொப்புளங்கள் !- மெல்பேர்ன் மருத்துவ பேராசிரியர் திஸ்ஸ விஜயரத்ன

கொரோனாத் தொற்றின் புதிய அறிகுறியாக கால்களில் கொப்புளங்கள் ஏற்படும் என்று அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் வெஸ்டேர்ன் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் பிரதானையாக பணியாற்றும் இலங்கையின் மருத்துவ பேராசிரியர் திஸ்ஸ விஜயரத்ன தெரிவித்துள்ளார். ஸ்பெய்னில் இடம்பெற்ற கால்கள் தொடர்பான நிபுணர்களின் தேசியக் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.சிறுவர்கள்,இளைஞர்கள்,சில சந்தர்ப்பங்களில் முதியவர்களுக்கும் கொவிட்19 தொற்று அறிகுறியாக கொப்பளங்களை அவதானிக்க முடியும் மேலும் இது எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு நோயாளிக்கும் உள்ளதாக குறிப்பிடப்பட்டதே தவிர விகிதாசார அடிப்படையில் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் திஸ்ஸ விஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

வருமானம் இல்லாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகள் ;மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது கொடுப்பனவை பெற தகுதியுள்ள நபர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மெக்சிகோவில் காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. 200-க்கும் அதிகமான நாடுகள் கொரோனா வைரசின் கோரப் பிடியில் சிக்கி, மீள முடியாமல் திணறி வருகின்றன. உலகம் முழுவதும் இந்த கொடிய வைரசால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் எகிறி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு கொரோனாவால் ...

Read More »

உலக சுதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி நிறுத்தம்

கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக குற்றம்சாட்டி வரும் டிரம்ப் அந்த அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் 6 லட்சம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக அளவில் கொரோனாவுக்கு அதிக பாதிப்பு மற்றும் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில், சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் ...

Read More »

ஊரடங்கு கட்டுப்பாட்டைத் தளர்த்த முடியாது ! – ஆஸி. பிரதமர்

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போதைய சூழலில் ஊரடங்கு கட்டுப்பாட்டைத் தளர்த்த முடியாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கரோனோ தொற்று தீவிரம் தற்போது குறைந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் கூடுவதற்கும் பயணங்களுக்கும் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகள் விதித்தன. இந்நிலையில் கரோனா தொற்று தீவிரம் குறைந்துள்ள நிலையில், அக்கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை ஆஸ்திரேலிய ...

Read More »

யாழில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று – முழங்காவில் முகாமிலிருந்த 4 பேருக்கும் தொற்று!

இன்றைய பரிசோதனையில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர். ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர். 8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 ...

Read More »

12 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை!

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட 12 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்;. இது தொடர்பான அறிக்கை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடத்தப்பட்ட ஆராதனையில் பங்கேற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் தத்தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். குறித்த சந்தேகத்துக்குரியவர்களது சுயதனிமைப்படுத்தல் காலம் ...

Read More »

பிரான்சில் மே மாதம் வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 11-ம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 19 லட்சத்து 22 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 568 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் ...

Read More »

முடக்கப்பட்ட தாராபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த 8 ஆம் திகதி அதிகாலை முதல் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் குறித்த கிராமம் நேற்று திங்கட்கிழமைமாலை 3 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் ...

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட 4.23 லட்சம் நோயாளிகள்

உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசின் பாதிப்பில் இருந்து 4.23 லட்சம் நோயாளிகள் மீண்டுள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. இன்று ...

Read More »