கொரோனாத் தொற்றின் புதிய அறிகுறியாக கால்களில் கொப்புளங்கள் ஏற்படும் என்று அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் வெஸ்டேர்ன் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் பிரதானையாக பணியாற்றும் இலங்கையின் மருத்துவ பேராசிரியர் திஸ்ஸ விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்பெய்னில் இடம்பெற்ற கால்கள் தொடர்பான நிபுணர்களின் தேசியக் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.சிறுவர்கள்,இளைஞர்கள்,சில சந்தர்ப்பங்களில் முதியவர்களுக்கும் கொவிட்19 தொற்று அறிகுறியாக கொப்பளங்களை அவதானிக்க முடியும்
மேலும் இது எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு நோயாளிக்கும் உள்ளதாக குறிப்பிடப்பட்டதே தவிர விகிதாசார அடிப்படையில் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் திஸ்ஸ விஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal