Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஊரடங்கு தொடர்பான அறிவித்தல்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு  எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கு சட்டத்தை இன்று (20) முதல் கட்டம் கட்டமாக தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை,  புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் (20) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு ...

Read More »

சிறிலங்காவில் ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்றாளர்களாக நேற்று (19) இனங்காணப்பட்ட 17 பேரில் 10 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்குச் சென்று மார்ச் மாதம் 12 ஆம் திகதி நாடு திரும்பிய கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணின் குடும்ப உறவினர்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அன்னை பூபதியின் 32 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்! முன்னணியினரால் நினைவேந்தல்!

நாட்டுப்பற்றாளர் தியாகி பூபதி அம்மாவின் நினைவு தினமான இன்று மட்டக்களப்பு நாவலடி பகுதியில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் நிகழ்வு இன்று(19) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வு த.தே.மு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் அசாதாரண சூழ்நிலையால் இடைநிறுத்தப்பட்டது. தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவு தினமான இன்று அவரின் நினைவிடத்தில் சிறிலங்கா காவல் துறை மற்றும் படைப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் ...

Read More »

தேர்தலை நடத்துவது ஆபத்தானது!

இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ;தேசிய மற்றும் சர்வதேச சுகாதார நிபுணர்கள் நிலைமை சுமூகமானதும், பாதுகாப்பானதுமான நிலையை அடைந்திருக்கிறது என்பதை உறுதிசெய்யும் வரை தேர்தலை நடாத்துவது ஆபத்தானதும், பொறுப்பற்றதுமான செயலாகும் என்றும் சாடியிருக்கிறது. கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையில் பொதுத்தேர்தலை நடாத்துவது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான கடிதமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக போராடியவர்களுக்கு $50,000 அபராதம்!

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள ஓர் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுவிக்கக்கோரி, கார் ஊர்வலப போராட்டம் நடத்தியதற்காக போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சுமார் 50,000 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு தூண்டியதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப் பதிவுச் செய்திருக்கிறது ஆஸ்திரேலிய காவல்துறை. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் சுமார் 7 ஆண்டுகளாக பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரியே இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டத்திற்கு முன்னதாக, போராட்டம் நடந்தால் ...

Read More »

மெல்பேர்ன்- 65 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து!

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் 65 தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எளிதில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு மூலம் தஞ்சமடைய முயன்ற இந்த அகதிகள், பல ஆண்டுகளாக மனுஸ் தீவு தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தனர். கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த இவர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்ட சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். “ஒரு நாளில் 23 மணிநேரம் ...

Read More »

தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணியவர்கள் கைது செய்யப்படுகின்றனர்!

கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணிய நபர்களையே இப்போது கைது செய்துள்ளோம். இந்த குற்றத்தில் தொடர்புபட்ட அனைவரையும் விரைவில் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிப்போம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்கள் என பலர் அண்மைக் காலமாக கைதுசெய்யப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ...

Read More »

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

உயர் கல்வி மற்றும் பயற்சி நெறிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயர் கல்விக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மாணவர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஆராய்ந்து வருகிறது. அத்தோடு பயிற்சிகளுக்காகச் சென்றவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உயர் கல்வி மற்றும் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளவர்கள் தாய் ...

Read More »

கொழும்பில் 49 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 45 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவடடத்தில் 28 பேரும், யாழ்ப்பாணத்தில் 16 பேரும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, கல்முனை, காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய பகுதிகளில் மிகக் குறைந்தளவானோரே பாதிக்கப்பட்டுள்ளனர் என, தொற்று நோயியர் பிரிவு தெரிவித்துள்ளது.  

Read More »

ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த இளம் தாய்!

அம்பாறை மாவட்டம், அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணொருவர், நேற்றிரவு (17) 9 மணியவில் ஒரே சூலில் 3 சிசுக்களைப் பெற்றெடுத்துள்ளார். நேற்றுக் காலை பிரவச வலி என 29 வயதுடைய குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  இரவு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 சிசுக்களும் பெறப்பட்டுள்ளதுடன், பெண் சிசுவொன்றும் ஆண் சிசுக்கள் இரண்டும்  தாயும் நலமாக உள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் பெண் சிசு 2,620 கிராமும் ஆண் சிசுக்கள் தலா 2,410 கிராமும் நிறையுடன் ஆரோக்கியமாக ...

Read More »