நாட்டுப்பற்றாளர் தியாகி பூபதி அம்மாவின் நினைவு தினமான இன்று மட்டக்களப்பு நாவலடி பகுதியில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் நிகழ்வு இன்று(19) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு த.தே.மு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் அசாதாரண சூழ்நிலையால் இடைநிறுத்தப்பட்டது.
தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவு தினமான இன்று அவரின் நினைவிடத்தில் சிறிலங்கா காவல் துறை மற்றும் படைப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் குவித்துள்ளனர்.
இந்திய அமைதிப்படையின் அடக்கு முறைக்கு எதிராக கடந்த 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்தார்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 32 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.