அம்பாறை மாவட்டம், அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணொருவர், நேற்றிரவு (17) 9 மணியவில் ஒரே சூலில் 3 சிசுக்களைப் பெற்றெடுத்துள்ளார்.
நேற்றுக் காலை பிரவச வலி என 29 வயதுடைய குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 சிசுக்களும் பெறப்பட்டுள்ளதுடன், பெண் சிசுவொன்றும் ஆண் சிசுக்கள் இரண்டும் தாயும் நலமாக உள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் பெண் சிசு 2,620 கிராமும் ஆண் சிசுக்கள் தலா 2,410 கிராமும் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களாக ஹொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகள் வரவு குறைவடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal