இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றுவரும் பேர்த் ஆடுகளத்தை அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான விதத்தில் தயாரிக்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல்களால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களிற்கு மிகவும் சாதகமான ஆடுகளத்தை தயாரிக்குமாறு என்னை கேட்டுக்கொண்டுள்ளனர் என ஆடுகள தயாரிப்பாளர் பிரெட் சிப்தோர்ப் தெரிவித்துள்ளார். பந்து உயர எழும்பி பார்ப்பதை பார்ப்பதற்கு அவர்கள் விரும்பினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இது எனக்கு முன்கூட்டியே கிறிஸ்மஸ் பரிசு கிடைத்துள்ளதை போன்றுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் எதிரணி ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை!- ஜேவிபி முயற்சி
அரசமைப்பை திட்டமிட்டு மீறியதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பிற்கு முரணான விதத்தில் செயற்பட்டார் என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அடிப்படையாகவைத்தே அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரி தொடர்ந்தும் அரசமைப்பை மீறினால் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோம் என தெரிவித்துள்ள விஜிதஹேரத் ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரமுடியும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசமைப்பு சதியில் ஈடுபட்ட ...
Read More »மடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும்!
மடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும்,ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு சரியான தொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் சிறிலங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ...
Read More »தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஓரங்கட்டுகிறது!
தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பளை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் பொது மக்களுடன் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டக் கூடிய ஒரு கண்காட்சி நிகழ்வும் இங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தூண்டக் கூடிய ...
Read More »மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் இரும்பு கம்யினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப்பெற்றது. மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளதாக முன்னாள் வடமாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் வைத்து அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் ...
Read More »பிரெக்சிட் விவகாரம்!-வெற்றி பெற்றார் தெரசா மே!
பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் நாடாளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், ...
Read More »ஆஸ்திரேலியவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது!
ஆஸ்திரேலியவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை, 2017 மற்றும் 2018க்கு இடையே மும்மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது. ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகத்தின் எண்ணிக்கைப்படி, 2017-18 நிதியாண்டில் 9,315 சீனர்கள் பாதுகாப்பு விசா (Offshore Protection Visa) கோரி விண்ணப்பித்துள்ளனர். இதுவே, கடந்தாண்டு 2,269 சீனர்கள் மட்டுமே பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். இந்த அடிப்படையில், தஞ்சம் கோரி விண்ணப்பித்த சீனர்களின் எண்ணிக்கை 311 சதவீதம் அதிகரித்துள்ளது. திடீர் அதிகரிப்பு ஏன்? ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் மற்றும் சுற்றுலா விசாவில் வரக்கூடிய பல சீனர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிப்பது இந்த திடீர் ...
Read More »புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்துக்கு நஷ்டஈடு கொடுத்த அவுஸ்திரேலிய அரசு!
புகலிடக்கோரிக்கையாளர் குடும்பம் ஒன்றுக்கு ஒரு லட்சம் டொலர்களை அவுஸ்திரேலிய அரசு ஈரானைச் சேர்ந்த குடும்பம் ஒன்றுககு நஷ்ட ஈடாக வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களில் குறித்த குடும்பத்தினர் இருந்த நிலையில் நடத்தப்பட்ட முறை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து நியூசவுத் வேல்ஸ் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தினர் தடுப்பு முகாம்களில் அனுபவித்த மற்றும் பார்த்த அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு புகலிடம் கோரி ஈரானிலிருந்து வந்த குறித்த குடும்பம் 2010-2011 வரையான காலப்பகுதியில் கிறிஸ்மஸ் தீவு, ...
Read More »மைத்திரியின் வேண்டுதலை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு!
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டாம் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் தீடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பிற்கு அழைத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய சந்திப்பில் நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை ...
Read More »ரணில் மீதான நம்பிக்கையை காட்டும் பிரேரணை இன்று!
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. இன்று (12) பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது குறித்த பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரிலியல்ல, ராஜித சேனாரத்ன, பழனி திம்பம்பரம், மங்கள சமரவீர மற்றும் ரிசாத் பதியுத்தீன் ஆகியோர் இந்த யோசனையை சமர்ப்பித்துள்ளனர். எவ்வாறாயினும் இன்றை சபை அமர்வில் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal