ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.
இன்று (12) பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது குறித்த பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரிலியல்ல, ராஜித சேனாரத்ன, பழனி திம்பம்பரம், மங்கள சமரவீர மற்றும் ரிசாத் பதியுத்தீன் ஆகியோர் இந்த யோசனையை சமர்ப்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இன்றை சபை அமர்வில் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal