அரசமைப்பை திட்டமிட்டு மீறியதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பிற்கு முரணான விதத்தில் செயற்பட்டார் என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அடிப்படையாகவைத்தே அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி தொடர்ந்தும் அரசமைப்பை மீறினால் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோம் என தெரிவித்துள்ள விஜிதஹேரத் ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசமைப்பு சதியில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக விசேட விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இதற்கான நடவடிக்கைகளை தனது கட்சி முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal