Tag Archives: ஆசிரியர்தெரிவு

கதிர்காம ஆடிவேல் திருவிழா தொடர்பில் குழப்பம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நடைபெறும் உற்சவ காலம் தொடர்பாக வேறுபட்ட தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அதனை தீர்த்துவைத்து உரிய சரியான காலத்தை அறிவிக்குமாறு கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கம் மொனராகலை அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இரு மாதகாலத்திற்கு முன்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பாதயாத்திரையை மேற்கொள்ளும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைச் சங்கத்தினர் இவ்வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளனர்.   சங்கத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் மொனராகலை அரச அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாம் வருடாந்தம் யாழ். செல்வச்சந்நதி ...

Read More »

104 வயது பாட்டியின் விசித்திர ஆசை!

முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் விசித்திர ஆசை. இங்கிலாந்தில் முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் விசித்திர ஆசையை நிறைவேற்றும்விதமாக, அவரை கைது செய்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் வசிப்பவர் களின் ஆசையை நிறைவேற்ற இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று முடிவு செய்தது. இதையடுத்து முதியவர்கள் தங்கள் ஆசைகளை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி, அதற்கென தொண்டு நிறுவனம் வைத்திருந்த பெட்டியில் போட்டுள்ளனர். அதில் ஆன் புரோக்கன்புரோ ...

Read More »

முஸ்லிம்களே! உங்கள் சொந்த நாடுகளிலேயே இருங்கள்!

உலகநாடுகளில் உள்ள முஸ்லீம்களை ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரத்தை நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் முஸ்லிம்களை தங்கள் சொந்த நாடுகளிலேயேயிருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். சிட்னியை சேர்ந்த மகிர் அப்சர் அலாம் என்ற ஐஎஸ் உறுப்பினரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் குர்திஸ் ஆயுத குழுவினர் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி பகுதி மீது தாக்குதல் மேற்கொண்டவேளை மகிர் அலாமையும் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கைதுசெய்துள்ளனர். 24 வயது பல்கலைகழக மாணவரான அவர் 2014 இல் சிரியா சென்று ஐஎஸ் ...

Read More »

கந்தளாய் பிரதேச சபை செயலாளர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறை!-இளஞ்செழியன்

திருகோணமலை – கந்தளாய் பிரதேச சபை செயலாளர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார். அரச பணம் 30 லட்சத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு 10 வருடம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்த 30 லட்சத்துடன் மேலதிகமாக 90 லட்சத்தினை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read More »

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு – ஆஸ்திரேலியர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு!

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பயங்கரவாதி பிரெண்டன் டாரன்ட் மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் நீதிபதி பதிவு செய்தார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர். உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலை நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ...

Read More »

அவுஸ்திரேலியாவில் விசா கட்டணங்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அவுஸ்திரேலியாவுக்கான சகல விசா விண்ணப்ப கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிதிநிலை அறிக்கையின் கீழ் 5.4 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பின் மூலம் அரசுக்கு அடுத்த நான்கு வருடங்களில் 275 மில்லியன்கள் இலாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாக்கட்டண உயர்வு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டீ-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் அணிகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரவுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணி உத்தியோகத்தர்களுக்கான விசா விண்ணப்பத்தை கட்டணமில்லாமல் ...

Read More »

ஜனாதிபதி வாசஸ்தலத்துக்கு முன் உண்ணாவிரதம் இருந்தவர் விடுவிப்பு!

ஜனாதிபதி வாசஸ்தலத்துக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட, அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு முன்பாக, இடையூறு விளைவிக்கும் வகையில் நடத்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், வாழைத்தோட்ட காவல் துறையால், அவர் கைதுசெய்யப்பட்டு, ​கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போ​தே, நீதவான் லங்கா ஜயரத்ன மேற்கண்டவாறு உத்தரவிட்டார். போதைப்பொருளைப் பயன்படுத்திவிட்டு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் முன்பாக, வீதியை மறித்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றே ​பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தனர். எனினும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு ...

Read More »

உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணம்!

உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளால் மரணமடைகிறார்கள் – என ஆய்வில் தெரியவந்து உள்ளது. தி லான்ஸெட் ஆன்லைனில் 195 நாடுகளில்  நடத்திய ஆய்வு முடிவுகள், வெளியிடப்பட்டு உள்ளது அதில் கூறி இருப்பதாவது:- உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது மற்றும் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43வது இடத்திலும் , பிரிட்டன் 23வது இடத்திலும்,  சீனா 140வது மற்றும் இந்தியா 118 வது இடத்திலும் ...

Read More »

நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி !நொதர்ன் பவர் ரூ. 20 மில். நட்டஈடு!

சுன்னாகம் பிரதேசத்தின் நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு, 200 இலட்சம் (20 மில்லியன்) ரூபாயை நட்டஈடாக வழங்குமாறு, சுன்னாகம் நொதர்ன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்துக்கு, உயர் நீதிமன்றம் இன்று (04) தீர்ப்பளித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலரான, பேராசிரியர் ரவீந்திர காரிவசம் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கே, இன்றைய தினம், மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த நொதர்ன் பவர் தனியார் மின்னுற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் காரணமாக, நிலக்கீழ் நீரில், எண்ணெய், கிரீஸ் போன்ற கழிவுகள் கலக்கப்பட்டதால், குறித்த பிரதேச ...

Read More »

டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வைரஸ் நிறைந்த பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், பால்ம் கடற்கரை பகுதியில் உள்ள  அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ பண்ணை வீட்டிற்கு சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் கடந்த சனிக்கிழமை மதியம் நுழைய முற்பட்டார். அங்குள்ள சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் விசாரித்தனர். அந்தப்பெண் உள்ளே நீச்சல் குளத்திற்கு குளிக்க செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அவரது கைகளில் எவ்வித நீச்சல் உடைகளும் ...

Read More »