வேலையற்ற பட்டதாரி பயிற்றியாளர்களை கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்துக்கு தற்காலிகமாக இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் கோரிக்கைக்மைய அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அத்துடன், பட்டதாரி பயிற்றியாளர்கள் அனைவரும் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி – அமெரிக்கா தகவல்
கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியும் எளிய வழியை அமெரிக்கா கூறியுள்ளது.கொரோனா வைரஸ் உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதையொட்டிய புதிய தகவலை அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி இல் வெளியிட்டுள்ளார். அதாவது, ஒருவருக்கு ஒவ்வாமை, சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தால் மணம் தெரியாமல் போனாலும், ...
Read More »கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 1,51,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் ...
Read More »1460 கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம்!
சிறு குற்றங்கள் மற்றும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாத நிலையில் சிறைச்சாலைகளில் இருக்கும் சுமார் 1460 கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த கைதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யப்படவிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.தென்னகோன் தெரிவித்தார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதன் காரணமாக, சிறைச்சாலைகளில் இருக்கும் சிறுகுற்றங்களுக்காக ஒருவருடத்திற்குக் குறைவான சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும், பிணை செலுத்த முடியாமல் இருப்பவர்களையும் விடுதலை செய்வது குறித்து ஆராய ஜனாதிபதி கோத்தாபய ;ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்திருந்தார். இக்குழுவின் ...
Read More »கரோனா வைரஸால் கலங்கும் உலக மக்கள்: ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிிற்கிறார்கள். நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், வடகொரியா எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தீவிர கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவுக்கு அண்டை நாடான தென் கொரியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 152 பேர் பலியாகியுள்ளனர். 9,583 பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு அண்டை நாடான ஜப்பானில் 52 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்தனர். 1,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை வடகொரியாவில் என்ன நடக்கிறது? அங்கு கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதா, பரவல் என்ன, ...
Read More »மூன்று ஊர்கள் முடக்கம்
புத்தளம் கடையன் குளம் மற்றும் கண்டி அக்குரணை பகுதியில் உள்ள இரண்டு ஊர்களையும் முழுமையாக முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய விதிகளை கடைபிடிக்கும் அவுஸ்ரேலியா!
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக முக்கிய இடங்களை மூடுவதற்கும் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை ஏற்படுத்த மக்கள் வீடுகளில் இருக்குமாறும் இதனை மீறினால் கடுமையான நடவடிக்கையுடன் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இன்று (சனிக்கிழமை) அவுஸ்ரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு வயதான பெண் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்ததுள்ளது. இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அம் மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ...
Read More »பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது!
யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது என்று சர்வதேச சட்டவாதிகள் ஆணைக்குழு விசனம் வெளியிட்டிருக்கிறது. யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக சர்வதேச சட்டவாதிகள் ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2000 ...
Read More »‘பலரின் ஒத்துழைப்பு இல்லை’
மக்களுக்குள் இருக்கும் ஒரு சில பொறுப்பற்றவர்களின் செயற்பாடுகள் காரணமாகவே, கொரோன வைரஸ் தொற்று மக்களுக்கு மத்தியில் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள தனிமைப்படுத்தல் மய்யங்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். அத்துடன், மேலும் சில தனிமைப்படுத்தல் மய்யங்களை அமைப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இனங்காணப்படுபவர்களை தனிமைப்படுத்தி, கொரோனாவை முற்றாக அகற்றும் நோக்குடனேயே இந்த தனிமைப்படுத்தல் மய்யங்கள் ...
Read More »கொரோனா அறிகுறிகளுடன் இருவர் அனுமதி!
கொரோனா தொற்றுக்கு இலக்கான அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர், நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்ட நிலையில், களுத்துறை- நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென, பண்டாரகம சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. டுபாயில் 2 நாள்கள் தங்கியிருந்து கடந்த 19 ஆம் திகதி நாடு திரும்பிய நபரே, கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனதுடன், குறித்த நபர் அட்டுலுகம பிரதேசத்தில் பலருடன் தொடர்புகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Read More »
Eelamurasu Australia Online News Portal