‘பலரின் ஒத்துழைப்பு இல்லை’

மக்களுக்குள் இருக்கும் ஒரு சில பொறுப்பற்றவர்களின் செயற்பாடுகள் காரணமாகவே, கொரோன வைரஸ் தொற்று மக்களுக்கு மத்தியில் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள தனிமைப்படுத்தல் மய்யங்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், மேலும் சில தனிமைப்படுத்தல் மய்யங்களை அமைப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இனங்காணப்படுபவர்களை தனிமைப்படுத்தி, கொரோனாவை முற்றாக அகற்றும் நோக்குடனேயே இந்த தனிமைப்படுத்தல் மய்யங்கள் அமைக்கப்படுவதாகக் கூறிய அவர், ஆனால், சந்தேகத்துக்கு இடமானவர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் கூறினார்.

எனவே, இவர்களை விரைவில் அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தும் செயற்றிட்டத்துக்குள் உள்வாக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.