கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 1,51,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது. தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும்
சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை உலகிற்கு அளித்துள்ளது.
ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்த போதிலும், மைக்கேல் லெவிட் துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் லெவிட் மதிப்பிட்டு இருந்தார். அதுபோலவே நடந்து உள்ளது. சீனாவில் 3,277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவரின் கூற்றின் படியே, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சீனாவில் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மைக்கேல் கருத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
Eelamurasu Australia Online News Portal