Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தேவை இல்லை என்பதா?

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரையில் ...

Read More »

தமிழினத்தின் போராட்டம் தொடரும்!

“தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று 19ம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் பொங்கல் விழா நிகழ்வு திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் சண்முகம் குகதாசன் தலைமையில் ...

Read More »

இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.!

2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம். இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது. அதாவது  விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் ...

Read More »

அகதிகளை சிறை வைக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் அகதிகளை சிறைவைக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், பப்பு நியூ கினியாவில் உள்ள பொமனா சிறை வளாகத்தில் அமைந்துள்ள குடிவரவுத் தடுப்பு மையத்தில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தூக்கமின்மையால் சித்ரவதைப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நிதியுதவினால் கட்டப்பட்ட பொமனா சிறை வளாகத்தில் கட்டப்பட்ட குடிவரவுத் தடுப்பு மையத்தில், ஏழு ஆண்டுகளாக மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த தஞ்சக்கோரிக்கையாளர்களில் 18 பேர் முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு தடுத்து ...

Read More »

2023 வரை GSP+ வரிச் சலுகை தொடரும்!

GSP+ வரிச் சலுகையை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதன் கண்காணிப்பு செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மாலத்தீவு தூதுக்குழுவின் துணைத் தலைவர் தோர்ஸ்டன் பார்க்பார்ட் (Thorsten bargfarde) தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ...

Read More »

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள்!

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் எனப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலை கிண்ணியால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். நாம் ஆட்சிக்கு வந்து மறு நாளே மத்திய வங்கி கொள்ளையர் களையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளையும் ; சிறையிலடைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இது பற்றி விசாரணை கூட நடத்த முடியவில்லை. மக்களுக்கு வழங்குவதாகக் கூறிய நிவாரணங்களை ...

Read More »

மஹிந்தானந்தவின் கருத்துக்கு சிவஞானம் கண்டம்!

தமிழ் மக்களுக்குச் சோறும் தண்ணியும் தான் முக்கியம் என்று கூறிய மஹிந்தானந்த அளுத்கமகே கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மஹிந்தானந்த அழுத்தமே தமிழர்களைச் சந்திப்பதற்காகக் கூறி யாசகரை சந்தித்துவிட்டா இவ்வாறான கருத்துக்களைக் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தமிழ் மக்களுக்குச் சோறும் தண்ணியும் தான் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நாளை (ஜனவரி 19) நடைபெற உள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால்  தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ...

Read More »

இரண்டு தசாப்தங்கங்களை தொடும் நிலையிலும் பொங்கி வழிந்த பொங்குதமிழ் பிரகடனம்!

பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வையடுத்து யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த பிரகடனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தி இவ்வாண்டின் இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை பல்கலைக்ககழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுவிபரம் வருமாறு, “ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்துக்கான அடிப்படை அபிலாசைகளையும் நியாயங்களையும் சர்வதேசத்துக்கு ஒரே குரலில் தமிழ் மக்கள் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு நீந்திச் செல்ல முயன்றவர்!

அப்துல் ரகுமான் என அறியப்படும் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர், விசா காலம் முடிந்த நிலையில் கிழக்கு திமோரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிகுந்த சோர்வுடன் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டென்கரா மாகாணம் அருகே மிதந்து கொண்டிருந்த அவரை, உள்ளூர் மீனவர் ஒருவர் மீட்டிருக்கிறார். “கிழக்கு திமோரிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி நீந்திச் செல்ல முயன்ற நிலையில் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் கடலில் தவித்து வந்திருக்கிறார்,” எனக் கூறியிருக்கிறார் மலாக்கா காவல்துறையின் தலைமை அதிகாரி ஆல்பெர்ட் நீனோ. “அவர் மீட்கப்பட்ட பொழுது, மிகவும் ...

Read More »