ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் ஜனாதிபதி செயலணி எதற்கு, மக்கள் எழுப்புகின்ற சந்தேகங்கள் தனக்கும் இருப்பதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தொல்பொருள் விடயங்களை ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட செயலணி மக்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பன்முகத்தன்மை அற்றதாகவும் தெரிகின்றது. ஏன் இவ்வாறு ஒரு பகுதிக்கு மட்டும் தொல்பொருள் செயலணி நியமிக்கப்பட வேண்டும். உன்ற கேள்வி எனக்குள்ளும் எழுகின்றது. ஜனநாயகத்திற்கு எப்போதும் சிவில் நிர்வாகமே முக்கியத்துவமிக்கதாக அமையும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறிலங்கா ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
முக்கிய அரசியல்வாதிகளை முன்னிலையாகுமாறு அறிவிப்பு
அவன்காட் நிறுவனத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் சாட்சியளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, பாட்டலி சம்பிக ரணவக்க , ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 18 பேருக்கு எதிர்வரும் எதிர்வரும் புதன்கிழமை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவன்ட்காட் நிறுவனம் தன்னிச்சையாக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதாகவும், அதனால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து அவன்ட்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இவர்களுக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு ...
Read More »ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணத்தில் பாரிய சந்தேகம்!
ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று திஸ்ஸ அத்தனாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் அண்மையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கபட்டார். அவரது ...
Read More »கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி ஆவாரா?
அமெரிக்க துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கும் நிலையில் இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ...
Read More »ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி நீக்கப்படுகிறார்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் போரட்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் நீக்கப்படலாம் எனத் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க கிரிக்கெட் ஆஸ்திரேியா போர்டில் வேலை செய்த அதிகாரிகள் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், மாநில அளவிலான கிரிக்கெட் சங்கத்திற்கான நிதியிலும் பிடித்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா போர்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸை நீக்கி ...
Read More »ஆஸ்திரேலியா- ஜப்பான் புதிய ஒப்பந்தம்!
ஆஸ்திரேலியாவில் ஜப்பான் ராணுவத்தையும் ஜப்பானில் ஆஸ்திரேலிய ராணுவத்தையும் அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தம், வரும் ஜூலை மாதம் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இடையே கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ‘Reciprocal Access Agreement’ எனப்படும் அந்த ஒப்பந்தம் ராணுவம் ரீதியாக மட்டுமின்றி குற்ற விவகாரங்கள், குடிவரவுக் கட்டுப்பாடுகள், வரி தொடர்பான விவகாரங்கள், பேரழிவு நிவாரண செயல்பாடுகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான முறையை உருவாக்குவதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜூலை 2014ல் இரு நாடுகளுக்கிடையே இந்த ...
Read More »ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (14) முதல் மீள் அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச மற்றம் தனியார் நிறுவனங்களில் ஏற்கெனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது
Read More »1.7 லட்சம் சீனா ஆதரவு கணக்குகளை அதிரடியாக நீக்கிய ட்விட்டர்
சீனாவுக்கு ஆதரவான 1 லட்சத்து 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன என்பதும் தெரியவந்துள்ளது. உலகமெங்கும் குறுகிய செய்திகளை பதிவிடுவதற்கு பயன்படும் சமூக வலைதளமாக ட்விட்டர் செயல்படுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த சமூக வலைதளம், அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. ஏறத்தாழ 33 கோடி பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன், சவுதி அரேபிய மன்னர் சல்மான், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ...
Read More »வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம்! – சுகாஸ் அழைப்பு
கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து எதிர்ப்போம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம். இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகருமான சுகாஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; தமிழர்களுடைய தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கிலே முக்கியமான பகுதி கிழக்கு மாகாணமாகும். இவ் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளில் ஒன்றான தாயகக் கோட்பாட்டோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகக் கிழக்கு மாகாணம் ...
Read More »இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால்……..
தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடாத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். ;அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது திடீரென பொங்கிய பாசம் தேர்தல் நெருங்குகின்றது தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal