ஆஸ்திரேலியா கிரிக்கெட் போரட்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் நீக்கப்படலாம் எனத் செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க கிரிக்கெட் ஆஸ்திரேியா போர்டில் வேலை செய்த அதிகாரிகள் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேலும், மாநில அளவிலான கிரிக்கெட் சங்கத்திற்கான நிதியிலும் பிடித்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா போர்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸை நீக்கி விட்டு இடைக்காக அதிகாரியை நியமிக்க போர்டின் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டில் தலைமை நிர்வாகியாக 17 வருடங்களாக ஜேம்ஸ் சுதர்லாந்து இருந்து வந்தார். கடந்த 20 மாதத்திற்கு முன் ஜேம்ஸ் சுதர்லாந்து நீக்கப்பட்டு கெவின் ராபர்ட்ஸ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
47 வயதாகும் ராபர்ட்ஸ் நீக்கப்பட்டால், ரக்பி ஆஸ்திரேலியா அல்லது தேசிய ரக்பி லீக் அணியில் சேர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.