ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று திஸ்ஸ அத்தனாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் அண்மையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கபட்டார். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்று இருவேறு வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் மறைந்து இரகசியம் என்ன ?
உயிரிழந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர பல ஊழல்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வந்த நபராவார். ஸ்ரீலங்கன் விமான உள்ளிட்ட விமான சேவைகளில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பில் அவர் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். இவரது கொலை யாராலும் எதிர்பார்க்க முடியாதளவிற்கு இடம்பெற்றுள்ளது.
இவரது மரணத்தை தற்கொலை என்று உறுதிப்படுத்துவதற்கு சில ஊடகங்களும் பொலிஸாரும் முயற்சிக்கின்றமையை காணக்கூடியதாகவுள்ளது. அவர் தற்கொலைக்கான கடிதமொன்றினையும் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு இந்த கொலை இடம்பெற்றுள்ளது. சுதந்திர சதுக்கத்தில் இவ்வாறானதொரு மரணம் இடம்பெற முடியுமா என்பது முதலாவது பிரச்சினையாகும்.
ரஜீவ ஜயவீர அங்கு சென்று மரணத்ததற்கான எவ்வித காட்சிகளும் அங்குள்ள சி.சி.டி.வி. கமராக்களில் பதிவாகவில்லை. அனைத்து சி.சி.டி.வி. பதிவுகளும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிநுட்ப கோளாறு காரணமாக அவை அழிவடைந்துள்ளதாக கூறுகின்றனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தும் காரணியாகும். ரஜீவ ஜயவீர குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த முறை தற்கொலை செய்து கொண்ட முறை என எந்த அடையாளமும் இல்லை.
அவரது கொலை அல்லது மரணம் இடம்பெற்றுள்ள விதம் பற்றி அவதானிக்க வேண்டும். அவர் வாயில் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். வாயில் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்ற செய்தியை இப்போதே முதன்முறையாகக் கேட்கின்றேன்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் தலையில் சுட்டுக் கொண்டே உயிரிழப்பார்கள். வரலாற்றில் நூற்றுக்கு நூறு வீதம் இவ்வாறே இடம்பெற்றுள்ளது. ஆனால் இவர் வாயில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். அத்தோடு அவர் சுட்டுக் கொண்ட துப்பாகி ரவையும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவ்வாறெனில் இதற்கான காரணம் என்ன ? வாயில் சுட்டுக் கொண்டார் என்று கூறும் போது , ‘வாயைத் திறக்க வேண்டாம். அதிகமாக பேச வேண்டாம். ஊழல்கள் பற்றி பேச வேண்டாம். இதுவே நாம் தரும் தண்டனை.’ என்பதை பலவந்தமாக வலியுறுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் செய்யப்பட வேண்டும். இது மனித படுகொலையாகும்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் யாருடைய பாதுகாப்பை உறுதி செய்வது ? இதில் அச்சுறுத்தல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதன் மூலம் ஏதேனுமொரு கருத்தைக் கூற முற்படுகின்றனர். இது மிகவும் அபாயமானதும்