இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை (14) முதல் மீள் அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச மற்றம் தனியார் நிறுவனங்களில் ஏற்கெனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது
Eelamurasu Australia Online News Portal