சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் பட்டியலில் கூடுதலாக 1290 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி 1.5 லட்சம் உயிர்களை காவு வாங்கி உள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வுகான் நகரில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டது. வைரஸ் பரவத் தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலியாவில் கொரோனா அவசரகால நிதியுதவி!
ஆஸ்திரேலியாவில் கொரோனா எதிரொலி காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள அந்நாட்டு தொழிலாளர்களுக்கு அவசரகால நிதியுதவி வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த அவசரகால நிதியுதவியில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தவிர்க்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தையும் வாழ்வாதார சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் 482 எனும் தற்காலிக விசா விதிப்படி, பற்றாக்குறையின் அடிப்படையில் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் இந்த விசாவின் கீழ், அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை ஆஸ்திரேலியாவில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இவ்விசா மூலம், தத்ரா எனும் ஹோட்டலினால் ஸ்பான்சர் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா சென்ற 6 வெளிநாட்டுத் தொழிலாளர்கள், ...
Read More »21 ஆம் திகதி காலை 8.45க்கு வீடுகளில் இருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி!
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இம்மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு வருடம் நிறைவடைகிறது. இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் காலை 8.45க்கு வீடுகளில் இருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு என கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இதேவேளை இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுத் திருப்பலிகள் மற்றும் விசேட வேலைத்திட்டங்கள் ஆகியன ஏற்கனவே திட்டமிப்பட்டப்படி நடத்தப்படாது என்றும் ...
Read More »ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்!
தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன யாழில் தெரிவித்தார் வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை ...
Read More »கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சீனா, அமெரிக்கா, இந்தியா போட்டி
கொரோனா வைரசின் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து, சந்தைக்கு முதலில் கொண்டு வந்து நிறுத்தப்போவது யார்? என்ற போட்டி இப்போது சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெறியாட்டம் போட்டு வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றி, 4 மாதங்களில் உலகமெங்கும் 19 லட்சம் பேரை தாக்கி, 1 லட்சத்து 26 ஆயிரம் பேரின் உயிர்களை உலகளவில் பலி வாங்கியும் இந்த கொலைகார வைரசின் யானைப்பசி அடங்கவில்லை. ஆனாலும் எப்படியாவது இந்த கொரோனா வைரசுக்கு முடிவு கட்டிவிட ...
Read More »ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை
ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்ற வாலிபருக்கு 1 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மக்கள் கொரோனா வைரசின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நாடுகள் ஊரடங்கை மீறும் நபர்களுக்கு அபராதம், சிறை போன்ற தண்டனைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அந்த நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ...
Read More »சங்கிலி தொடர் தொற்றுக்கு காரணம் என்ன?
தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (16) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாகக் கூறமுடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மதபோதகரினால் ...
Read More »வாக்களிக்கப் போகும் மக்கட் தொகை வெகுவாகக் குறையும்!
நா்ாளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ;ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அந்த வகையில், கொரோனா முற்றாக நீங்கும் வரை தேர்தலை நடத்தக் கூடாதெனவும் மக்களின் பாதுகாப்பே முக்கியமெனவும் தெரிவித்துள்ளார். கேள்வி – நாடாளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் – தற்பொழுது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற ...
Read More »நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 அகதிகள் மீட்பு- 24 பட்டினியால் மரணம்!
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பங்களாதேஸ் கரையோர காவல் படையினர் குறிப்பிட்டபடகிலிருந்த 24 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். 382 ரோகிங்யா இனத்தவர்களை மீன்பிடிப்படகிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளோம் என கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பட்டினியால் வாடிய நிலையில் காணப்பட்டனர்,கடந்த 58 நாட்களாக அவர்கள் கடலில் காணப்பட்டுள்ளனர், ஏழு நாட்களாக அவர்களது படகு எங்கள் கடற்பகுதியில் காணப்பட்டுள்ளது என பங்களாதேஸ் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மீன்பிடிப்படகொன்று நடமாடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த ...
Read More »கொழும்பில் கொரோனா தொற்றாளர் அடையாளம் !
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றிரவு ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று அடையாளம் காணப்பட்ட ஐவரில் நால்வர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்களென்றும் நால்வரில் ஒருவரே இவ்வாறு கொழும்பில் அடையாளம் காணப்பட்டாரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் ஆவார். குறித்த பெண் இந்தியா சென்று திரும்பியிருந்தவரென தெரிவிக்கப்படுகிறது . இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையின் ஒருபகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, ...
Read More »
Eelamurasu Australia Online News Portal