தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன யாழில் தெரிவித்தார்
வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது.
எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.
ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள். மற்றையது உண்மையை பேசுங்கள் ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம்.
எனினும் நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்த வித செயற்பாட்டையும் ஈடுபட முடியாது எனவே வடக்கில் உள்ள மக்களிடம் நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal