Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்க வேண்டும்!-குமார வெல்கம

சில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் முதலில் நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் வினவிய போதே, நாடாளுமன்ற உறுப்பினரான குமாரவெல்கம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி!

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 54 பேர் காயம் அடைந்தனர். மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர். அவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை ஹிடால்கோ மாகாண கவர்னர் ஓமர் ...

Read More »

அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்!

அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடங்கியிருப்பதால், டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கும் தனது குழுவின் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் அதிபர்  டிரம்ப் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் சுமார் ஒரு மாத ...

Read More »

இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் அமெரிக்கா தலையிடமுடியாது!

இரட்டை பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம் என தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச  தனிப்பட்ட நபர்களின் உரிமைகளை அமெரிக்காவால் தடுக்க முடியாது என கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரட்டை பிரஜாவுரிமை  குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இரட்டை பிரஜாவுரிமையை என்னால் தொடர்ந்து வைத்திருக்க முடியும் அல்லது கைவிடமுடியும் இது எனது தனிப்பட்ட விடயம் என கோத்தபாய தெரிவித்துள்ளார். இது எனது தனிப்பட்ட விடயம், இதன் காரணமாக நான் இரட்டை பிரஜாவுரிமைய தொடர்ந்தும் வைத்திருக்கலாம் அல்லது கைவிடலாம், ...

Read More »

புதிய எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த கடமைகளை பொறுப்பேற்றார்!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.   அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ஷ ...

Read More »

மெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு!

மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆடும் லெவனில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் ...

Read More »

மஹிந்த அணியினருக்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது மகிந்த ராஐபக்ஷ தலைமையிலான அணியினருக்கு பகிரங்கமாக ஒரு அழைப்பு விட விரும்புகின்றேன். அதாவது புதிய அரசியலமைப்பு உருவாகுவதை தயவு செய்து நீங்கள் தடுக்க வேண்டாம்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மகிந்த ராஐபக்ஷ உருவாக்கிய சர்வகட்சி குழுவின் சிபார்சின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட நிரல்களை ஏற்றுக்கொள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தயார். புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது மஹிந்த ராஜபக்சவின் பங்களிப்பும் அதிகமாக இருக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள சுமந்திரன் மத்தி, மாகாண நிரல் ...

Read More »

எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க வேண்டும்!

வடக்கு – கிழக்கு தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்திகளை அரசாங்கம் முன்னெடுக்க முன்னர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான எம்முடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அமைச்சரவையில் ஆராய வேண்டும் என்ற எமது கோரிக்கை நியாயமானது. அதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதற்கான கட்டமைப்பு ஒன்றினையும்  ஐக்கிய தேசியக் கட்சியுடன் உருவாக்கியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு அபிவிருத்திகள் குறித்து அரசாங்கத்துடன் உருவாக்கியுள்ள உடன்பாடுகள் குறித்து வினவிய போதே  எம்.எ.சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More »

அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்!

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்கட்டுள்ளது. நேற்று (17) அதிகாலை பற்றைகளின் மறைவிலிருந்து வழிப்போக்கர்களால் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இனம் காணப்பட்டுள்ள இளம்பெணின் பெயர் Aya Masarwe (வயது 21) என தெரியவந்துள்ள அதேவேளை குறித்த பெண் இஸ்ரேலை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. குறித்த பெண் LaTrobe – Bundoora பல்கலைக்ககழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இதற்காக அவர் அவுஸ்திரேலிய தற்காலிக விசாவில் தங்கியிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயி?

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். அவர் தனியார் உள்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அடுத்து வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கு தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த பெண்ணான இந்திரா நூயி ...

Read More »