மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 54 பேர் காயம் அடைந்தனர்.
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர். அவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை ஹிடால்கோ மாகாண கவர்னர் ஓமர் பயாத் தெரிவித்தார்.
மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் ‘கியூ’ வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெறுகிறது.
Eelamurasu Australia Online News Portal