வடக்கு – கிழக்கு தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்திகளை அரசாங்கம் முன்னெடுக்க முன்னர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான எம்முடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அமைச்சரவையில் ஆராய வேண்டும் என்ற எமது கோரிக்கை நியாயமானது.
அதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதற்கான கட்டமைப்பு ஒன்றினையும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உருவாக்கியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்திகள் குறித்து அரசாங்கத்துடன் உருவாக்கியுள்ள உடன்பாடுகள் குறித்து வினவிய போதே எம்.எ.சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Eelamurasu Australia Online News Portal